வாடிகன்:
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கத்தோலிக்க தலைமையகம் அமைந்துள்ள வாடிகன் நகரில் ஒருவரை தாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது. பல்வேறு நாடுகளும் நோய் தொற்றை குணப்படுத்தும் வகையிலான கண்டு பிடிப்புகளை தீவிரப்படுத்தி வருகிறது.
கொரோனா வைரசுக்கு இத்தாலியில் இதுவரை 109 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கொரோனா தாக்குதல் வாடிகன் நகரிலும் பரவியுள்ளது. வாடிகன் நகரில் உள்ள ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை தனிப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இதனால் மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
[youtube-feed feed=1]