சான்பிரான்சிஸ்கோ:
நாளுக்கு நாள் பல நாடுகளில் தனது ராஜ்ஜியத்தை பரப்பி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவிலும் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளது.
இந்த நிலையில் பேஸ்புக், கூகிள் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய பரிந்துரைத்து வருகின்றன.
சாண்டா கிளாரா கவுண்டி நேற்று வெளீயிட்ட அறிக்கையை அடிப்படையில், ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் ஆண்டனி ஹாரிசன் வெளியிட்ட இமெயிலில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கயில், வரும் மார்ச் 16-ஆம் தேதி வரை, ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் இமெயிலில் ஆண்டனி ஹாரிசன் குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர்கள் மற்றும் காண்டிராக்டர்கள் ஆகியோர் சைட் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடத்தில் வேலை செய்வார்கள் என்றும் பே ஏரியாவில் பணியாற்றுபவர்கள் மட்டுமே பணிக்கு வரமால் வீட்டில் இருந்து பணியாற்றுவார்கள் என்றும் அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.