சிட்னி:

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி ஆஸ்திரேலியாவில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த வைரஸ் வேகமாகச் சீனா முழுவதும் பரவி உள்ளது. தற்போது சீனாவில் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ள போதிலும் உலகின் பல நாடுகளும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

நேற்றுடன் சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 3000 ஐ நெருங்கி உள்ளது. அதிகார பூர்வமான மரணமடைந்தோர் எணீக்கை 2870 எனக் கூறப்படுகிறது. நேற்று மட்டும் சீனாவில் 35 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 573 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பாதிப்பால் ஆஸ்திரேலியா நாட்டில் முதன்முதலாக இன்று 78 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்த நபரின் மனைவியான சுமார் 79 வயது மூதாட்டியும் இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மேற்கு ஆஸ்திரேலியாவுக்கான தலைமை மருத்துவ அதிகாரி ராபர்ட் ஆன்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வட கொரியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதால் அவர் கொல்லப்பட்டதாக டிவிட்டரில் தகவல்கள் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.