திருப்பதி திருமலைக்கு மலைபாதையில் இரவு நேரங்களில் செல்லும்போது வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு ஏறுவதையும் இறங்குவதையும் பார்ப்பதே அலாதி.
மேலே திருமலையில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஏழுமலையானின் திருநாமமும், சங்கு சக்கரமும் காண்பதற்கு இனிமையாக இருக்கும்.

இப்படி பௌர்ணமி அன்று மலைப்பாதையில் செல்லும் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், இறைவனின் படைப்பில் தான் எத்தனை அற்புதங்கள் என்று வியக்க வைக்கிறது.
வாகன முகப்பு விளக்குகளும், திருநாமம் சங்கு சக்கர வண்ண விளக்குகளும், அதற்கும் மேல் நிலவொளியும். காண்பதற்கு ஏழுமலையானுக்கு கிரீடம் சூட்டி அங்கவஸ்திரம் போர்த்தினார் போல், அத்தனை அற்புதமாக மனதை லயிக்கிறது.
நன்றி : ப்ரியா
Patrikai.com official YouTube Channel