சென்னை:
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏப்ரல் மாதத்துக்கு முன்பே மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் வழக்கம்போல அறிவித்து உள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள், ஏப்ரலுக்கு முன்பே மாணவர் சேர்க்கையை நடத்தினாலோ, விளம்பரம் கொடுத்து, கல்வியாண்டு தொடங்கும் முன்பே, அதாவது ஏப்ரல் மாதத்துக்கு முன்பே மாணவர் சேர்க்கையை நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஎச்சரித்தார்.
மேலும், தமிழகத்தில் உள்ள தனியார் டியூசன் மையங்கள் அரசின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக வறியவர், டியூசன் மையங்களும் முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடுவதும், அதை கண்டுகொள்ளாமல் தனியார் பள்ளிகள் டிசம்பர் மாதம் முதலே மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் செய்து பிப்ரவரிக்குள் மாணவர்கள் சேர்க்கையை நடத்த கல்லா கட்டி விடுகின்றன. ஆனால், கல்வி அமைச்சர் கடமைக்காக எப்போதும் போல, ஏப்ரல் மாதத்துக்கு முன்பே மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்து உள்ளார். அமைச்சர் செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு வெறும் வெத்து வேட்டு என்று விமர்சிக்கப்படுகிறது.