சென்னை:

திமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில், நாளை 12ந்தேதி மற்றும் நாளை  மறுதினம் 13 ந்தேதி அன்று நடைபெறுவதாக இருந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  வரும் 15 ந்தேதி, 16ந்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணைஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில்,  அண்ணா தி.மு.க. வளர்ச்சிப் பணிகள் குறித்தும்; தேர்தல் பணிகள் குறித்தும் 13 ந்தேதி அன்று நடைபெறுவதாக இருந்த, பின்வரும் மாவட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு 15 ந்தேதி அன்று கீழ்க்கண்டவாறு நடைபெறும்.

15.2.2020 – சனிக்கிழமை பகல் 12 மணி

1. திருநெல்வேலி மாநகர், 2. திருநெல்வேலி புறநகர், 3. காஞ்சிபுரம் கிழக்கு, 4. காஞ்சிபுரம் மத்தியம், 5. காஞ்சிபுரம் மேற்கு, 6. வேலூர் கிழக்கு, 7. வேலூர் மேற்கு

மாலை 5 மணி

8. விழுப்புரம் வடக்கு, 9. விழுப்புரம் தெற்கு, 10. வட சென்னை வடக்கு (கிழக்கு), 11. வட சென்னை வடக்கு (மேற்கு) 12. வட சென்னை தெற்கு, 13. தென் சென்னை வடக்கு, 14. தென் சென்னை தெற்கு

16ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10மணி

1) தேனி, 2) அரியலூர், 3) தருமபுரி, 4) கோவை மாநகர், 5) கோவை புறநகர், 6) திருப்பூர் மாநகர், 7) திருப்பூர் புறநகர்

மாலை 4 மணி

8) சேலம் மாநகர், 9) சேலம் புறநகர், 10) நாமக்கல், 11) கிருஷ்ணகிரி கிழக்கு 12) கிருஷ்ணகிரி மேற்கு, 13) ஈரோடு மாநகர் , 14) ஈரோடு புறநகர்

இந்த ஆலோசனைக் கூட்டங்களில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தாங்கள் சார்ந்துள்ள மாவட்டத்திற்கான குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.