பிஜப்பூர்:

த்தீஸ்கரின் தன்டேவாடா மாவட்டத்தில்  5 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சத்தீஸ்கா் மாநிலம், பிஜாப்பூா் மாவட்டத்தில் நக்ஸல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே நேற்று (திங்கள்கிழமை)  ஏற்பட்ட மோதலில் நக்ஸல் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த மோதலில் சிஆா்பிஎஃப் வீரா்கள் 2 போ உயிரிழந்தனா்.

இந்த நிலையில், சிஆர்பிஎஃப் வீரர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் 5 நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்.

சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் தொல்லை சமீககாலமாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்துது. இந்த நிலையில்,  சிக்பல், படேகடம், தேலம் மற்றும் தேதம் கிராமப்பகுதிகளில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மாவட்ட ரிசர்வ் பாதுகாப்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸார் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது, 1 நக்சலைட்டு உள்பட 2 காவல்துறையினரும் பலியானார்கள். இதைத்தொடர்ந்த, இன்று  தேதம் கிராமத்தின் அருகே பதுங்கியிருந்த ஜன்மிலிடியா நக்சல் அமைப்பைச் சேர்ந்த ராகுல் மர்கரம். பாமன் மர்கரம், மங்கள் மாத்வி, மங்கு மாத்வி மற்றும் 18வயதுக்கு உட்பட்ட மைனர்  உள்பட  5 நக்ஸல்கள்  போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.