டெல்லி:
தலைநகர் டெல்லியில் 3வது முறையாக அரவிந்த் கெஜ்ர்வாரில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கிறது. தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளை கூண்டோடு பெருக்கி தள்ளி, மீண்டும மக்களின் அமோக ஆதரவோடு ஆட்சியை கைப்பற்றுகிறது…
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு, ஆட்சியை பிடிக்க 36 தொகுதிகளே போதும் என்ற நிலையில், தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பதித்து வருகிறது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி….
தேசிய கட்சிகளை கூண்டோடு சுருட்டி தள்ளிய ஆம்ஆத்மி கட்சி வரலாறு காணாத வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட புது டெல்லி தொகுதியில் அவரே முன்னிலையில் இருக்கிறார்.
ஆம் ஆத்மியிலிருந்து வெளியேறி காங்கிரஸ், பாஜகவில் இணைந்தவர்கள் தோல்வி முகத்தை எதிர்கொண்டுள்ளனர்.
முற்பகல் 11.30 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 58 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ.க. 12 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியையும் சந்தித்து வருகிறது.