டெல்லி:

மிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்பட  இந்தியா முழுவதிலும் சுமார் 55 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க கடந்த 2018ம் ஆண்டு  மத்திய அரசு ஏலம் விட்டது. பின்னர், 2வது கட்டமாக கடந்த ஆண்டு (2010) ஜனவரி யில்  காவிரி பாயும் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் தொடங்கி, நாகை மாவட்ட தெற்கு பகுதிகளில் 474 ச.கி.மீ பரப்பளவில்,14 வட்டாரங்களில் ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதி வழங்க வேதாந்தா உள்பட பல நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தமிழக விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதையும் மீறி மத்தியஅரசு  காவிரி டெல்டாவை நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், ஜனவரி மாதம் மத்தியஅரசு  ஹைட்ரோ கார்பன் தொடர்பான விதிமுறைகளை திருத்தி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி,   ‘தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ தேவையில்லை என தெரிவித்தது. இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்பகுதியாக அறிவிப்பதாக தெரிவித்தார். இதற்கான தீர்மானம் சட்டத்தில் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். இது விவசாயிகளில் வயிற்றில் பால் வார்த்துள்ளது.

இந்த நிலையில்,   ஹைட்ரோகார்பன் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.  திருச்சி சிவா  நோட்டீஸ் அளித்துள்ளது. அதில்,  காவிரி டெல்டாவை பாழ்படுத்தும் ஹைட்ரோகார்பன் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அவையை ஒத்திவைத்து விவாதிக்க வலியுறுத்தி உள்ளார்.