மும்பை:

விமும்பை மாநகரப் பேருந்து போக்குவரத்துக் கழகத்தில் தேஜஸ்வினி சிறப்பு பேருந்துகளை ஓட்டுவதற்காக நியமிக்கப்பட்டவர்களில்இருவர் மட்டுமே பெண்கள்..

இவர்களில் ஒருவர் பெயர் யோகிதா.. கடந்த 31ஆம் தேதி இவரை அதிரடியாக வேலையிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது போக்குவரத்து கழக நிர்வாகம். காரணம், பேருந்துக்குள் வேலை நேரத்தின் போது சீருடையுடன் இவர் நடனமாடிய டிக் டாக் வீடியோ ஒன்று வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆனதுதான்..

பாதிக்கப்பட்ட பெண் ஓட்டுனர் யோகிதா சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா ?

தனக்கு நன்கு பழக்கமாகி பேருந்தில் அடிக்கடி பயணிக்கும் ஆட்டோ ஓட்டுனர் நண்பர் ஒருவர் தனது நடனத்தை வீடியோ எடுத்து தனது அக்கவுண்டில் தனக்கே தெரியாமல் பதிவேற்றிவிட்டு விட்டதாக சொல்கிறார்.

இவ்வளவு காலம் ஓட்டுநராக தனது பணியின் போது ஒரு சின்ன தவறு கூட செய்யவில்லை என்று புலம்பும் யோகிதா, பல அதிகாரிகளின் அலுவலக கதவுகளை தட்டி முறையிட்டும், தனக்கு உதவ யாருமே முன் வரவில்லை என்று கண்ணீர் விடுகிறார் .

மீண்டும் பணி கிடைக்குமா, அது வரை என்ன செய்யப் போகிறோம் என்பதே புரியாமல் வாழ்க்கையே இருண்டு போய்விட்டது என்றும் யோகிதா தலையில் அடித்துக் கொள்கிறார்..

பலரை சிரிக்க வைக்கும் டிக் டாக் வீடியோக்கள் சிலருக்கு வாழ்க்கையே சூன்யமாக்கிவிட்டு வேடிக்கை பார்க்கும் பரிதாபத்தை என்னவென்று சொல்வது..

-ஏழுமலை வெங்கடேசன்