பீஜிங்:
சீனாவை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார். நோயை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்களை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
சீனாவில் வுகான் பகுதியில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. சீனாவில் இதுவரை 1016 பேர் இந்த வாரஸ் தாக்குதலில் பலியான நிலையில், 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல் பரவியது. கடநத 3 வாரங்களுக்கு முன்னர், அவர் பெய்ஜிங்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியபோதுதான், கடைசியாக அவரை அனைவரும் பார்த்திருக்கிறார்கள். அதன்பிறகு, அவரைக் காண முடியவில்லை. அதன்பிறகு நடந்த எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்ளவில்லைகொரோனா வைரஸ் பாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் கருத்துகளை வெளியிடாததால், அதிபர் குறித்த தகவல்கள் மர்மமாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில், ஜி ஜின்பிங் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடினார். இது தொடர்பாக புகைப்படம் வெளியாகி உள்ளது.
அந்த மருத்துவமனைக்கு முகமூடி அணிந்து சென்ற அதிபர் ஜி ஜின்பிங், அதுமட்டுமின்றி, பெய்ஜிங்கில் உள்ள சமுதாய நலக் கூடம் ஒன்றிற்கும் சென்றார். அப்போது அவரது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது, கொரோனா வைரஸுக்கு எதிராக இன்னும் “தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.