லாஸ் ஏஞ்சல்ஸ்:

லக சினிமாவின் சிறந்த விருதான ஆஸ்கர் விருது விழாஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் கோலாகமாக நடைபெற்றது. இதில் சிறந்த படமாக தென்கொரியாவின் பாராசைட் படம் தேர்ந்தெடுத்து அவார்டு வழங்கப்பட்டது.

92வது ஆஸ்கர் விருது விழா இதில் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை தென் கொரியாவின் பாராசைட் படம் பெற்றிருக்கிறது. இந்த படம் ஏற்கனவே  சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டு படம் ஆகிய பிரிவுகளில் 3 ஆஸ்கர் விருதுகளை பெற்றிருந்தது தென்கொரியாவின் பாராசைட் படம். இந்நிலையில் சிறந்த படத்திற்கான விருதையும் பெற்று 4 ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கிறது தென்கொரியாவின் பாராசைட் திரைப்படம்.

ஜோக்கர் படத்தின் நாயகன் ஜாக்கின் பீனீக்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை  பெற்றிருக்கிறார். ஜோக்கர் படம் சிறந் தபின்னணி இசைக்காகவிம்  ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது.

சிறந்த நடிகைக்கான விருது  ஜூடி படத்தில் நடித்த நடிகை ரெனி ஸெல்வெஜர்க்கு வழங்கப்பட்டு உள்ளது.

ஸ்கர் வரலாற்றில் முதல்முறையாக ஆங்கிலம் அல்லாத வேற்று மொழி படம் ஒன்று சிறந்த திரைப்படமாக தேர்வாகியிருக்கிறது.

‘Parasite’ என்ற கொரியத் திரைப்படம்தான் இந்தாண்டு ஆஸ்கரின் சட்டத் திட்டங்களை உடைத்து விருதினைப் பெற்றிருக்கிறது.

அதோடு ‘சிறந்த சர்வதேச திரைப்பட’த்திற்கான விருதையும் இத்திரைப்படமே பெற்றிருக்கிறது.

இந்தாண்டு முதல் ஆஸ்கர் விருதுப் பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படம்’ என்னும் கேட்டகிரியை ‘சிறந்த சர்வதேச திரைப்படம்’ என்று பெயர் மாற்றியிருக்கிறது ஆஸ்கர் விருது அமைப்பு..!

ஆஸ்கர் விருது பெற்றுள்ள ‘Parasite’ என்ற கொரியத் திரைப்படத்தின் காட்சி