டெல்லி:

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தலில், பிரியங்கா மகன் ரோஹன் (Raihan) முதன்முறையான தனது வாக்கினை செலுத்தி உள்ளார்.

70 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆட்சி தகக வைத்துக்கொள்ள ஆம்ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் மோதுகின்றன. அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று காலை முதலே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலையில் சுறுசுறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நேரம் ஆக ஆக மந்தமாக நடைபெற்று வருகிறது.

நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் முதல், பாஜக முத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.

பிரியங்கா காந்தி மகன் ரெய்ஹான்

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தனது கணவர் வத்ரா மற்றும் மகன் ரெய்ஹானுமன் வந்து வாக்கை பதிவு செய்தார். ரெய்ஹான் 18 வயது பூர்த்தியானதை தொடர்ந்து முதன்முறை வாக்காளராக தனது வாக்கை பதிவு செய்தார்.

முதன்முறையாக வாக்களித்தது குறித்து கருத்துதெரிவித்த ரெய்ஹான் ராஜீவ் வதேரா,  ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்பது ஒரு நல்ல உணர்வு. ஒவ்வொருவரும் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும்; அனைவருக்கும் பொது போக்குவரத்து வசதி இருக்க வேண்டும், அது மாணவர்களுக்கு மானியமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 114& 116ல் பிரியங்கா குடும்பத்தினர் தங்களது வாக்கினை செலுத்தினர்.