லண்டன்: ‘அனில் அம்பானி பணக்காரர் என்பதெல்லாம் அந்த காலம்; ஆனால் இன்று அப்படியில்லை’ என்று லண்டன் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார் அவரின் வழக்கறிஞர்.
அனில் அம்பானி தரவேண்டிய கடன் பாக்கிக்கு எதிராக சீனாவின் சீனா டெவலப்மென்ட் பேங்க், எக்ஸ்போர்ட் இம்போர்ட் பேங்க் ஆஃப் சீனா உள்ளிட்டவை அனில் அம்பானிக்கு எதிராக லண்டன் வர்த்த நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் வாதத்தில் இதைத் தெரிவித்தார் அவரின் வழக்கறிஞர்.
இந்த நிறுவனங்களுக்கு அனில் அம்பானி ரூ.5000 கோடிக்கு மேல் வழங்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
“இந்திய தொலைதொடர்பு சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள், அனில் அம்பானிக்கு பேரிழப்பை ஏற்படுத்திவிட்டன. இதனால், கடந்த 2012ம் ஆண்டு அனில் அம்பானியின் முதலீட்டு மதிப்புகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன.
அவரின் கடன்களோடு ஒப்பிடுகையில், அவரின் சொத்து மதிப்பு ஒன்றுமேயில்லை” என்று மேலும் வாதாடினார் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே.