ஓம் சரவணா பாவாய நமஹ
ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா
தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நமஹ

தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். இந்த மாதத்தில் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்…. இன்றைய தினம்  தவப்புதல்வனான முருகனை இன்று தரிசித்தால் ஞானம் நம் வசப்படும் என்பது ஐதிகம்.. அத்துடன் மேலே உள்ள ஸ்லோகத்தை கூறி முருகனை வேண்டினால் துன்பம் விலகும்….

தந்தைக்கு உபதேசம் செய்த தகப்பன் சுவாமி, ஓம் பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொன்ன அழகனை  போற்றி வழிபடுவதற்கு உரிய சிறந்த நாள் இன்று…
தமிழ்க்கடவுள்  முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாக்களில் சிறந்தது  தைப்பூசம்  விழா….

தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம் தைமாதம்.  27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவே தைப்பூசம்… இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.  தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பருவம்) இருக்கும்.

தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.

தமிழகத்தில் பழனியில் தைப்பூசம் மிகவும் சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது நின்றிருக்கும் முருகனுக்கு ஞான வேல் வழங்கிய இந்த தைப்பூச திருநாளில் தான். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. முருகன் கோவில்களிலேயே பழனி முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூசம் தான் மிகச்சிறந்தது.

தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

பக்தர்கள் விரதம் கடைபிடிக்கும் முறை

இன்றைய தினம் (பிப்ரவரி 8ம் தேதி) அதாவது தை மாதம் 25ஆம் தேதி பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படு கிறது. பூச நட்சத்திரம் பிப்ரவரி 7ஆம் தேதியான இன்று இரவு 10.55 மணியிலிருந்து தொடங்குகிறது என்பதால் விரதத்தின் போது எப்படி இருக்க வேண்டுமோ அந்த விதிகளை இந்த நேரத்திலிருந்து கடைப்பிடிப்பது நல்லது.

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளை களிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயி லுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

முருகனுக்கு உகந்த இந்தாளில் விரதமிருந்து காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்.

தைப்பூசம்

பழனி (திருவாவினன்குடி – சக்திகிரி) முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார்.

இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை.

பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள்.

பல வகை காவடிகள்

அலகு குத்துதல் – நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவி லுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.

சர்க்கரை காவடி – சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

தீர்த்தக் காவடி – கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

பறவைக் காவடி – அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.

பால் காவடி – பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

மச்சக்காவடி – மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

மயில் காவடி – மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

இன்றைய தினம் முருகனை துதித்து அருள்பெறுவோமாக….

ஓம் ஆறுமுகனே போற்றி
ஓம் ஆண்டியே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
ஓம் அழகா போற்றி ஓம் அபயா போற்றி

ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் ஆவினன் குடியோய் போற்றி
ஓம் இறைவனே போற்றி
ஓம் இளையவனே போற்றி
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி

ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மைந்தனே போற்றி
ஓம் ஈராறு கண்ணனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி

ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சஷ்டி நாயகனே போற்றி
ஓம் சரவணபவனே போற்றி
ஓம் சரணாகதியே போற்றி
ஓம் சத்ரு சங்காரனே போற்றி

ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஒன்றே போற்றி
ஓம் ஓங்காரனே போற்றி
ஓம் ஓதுவார்க்கினியனே போற்றி

ஓம் ஔவைக்கருளியவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் கந்தனே போற்றி
ஓம் கடம்பனே போற்றி

ஓம் கவசப்பிரியனே போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கிரிராஜனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் குகனே போற்றி

ஓம் குமரனே போற்றி
ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
ஓம் குறத்தி நாதனே போற்றி
ஓம் குரவனே போற்றி
ஓம் குருபரனே போற்றி

ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் சிக்கல்பதியே போற்றி
ஓம் சிங்காரனே போற்றி
ஓம் சுப்பிரமணியனே போற்றி
ஓம் சுரபூபதியே போற்றி

ஓம் சுந்தரனே போற்றி
ஓம் சுகுமாரனே போற்றி
ஓம் சுவாமிநாதனே போற்றி
ஓம் சுருதிப் பொருளுரைத்தவனே போற்றி
ஓம் சூழ் ஒளியே போற்றி

ஓம் சூரசம்ஹாரனே போற்றி
ஓம் செல்வனே போற்றி
ஓம் செந்தூர்க்காவலனே போற்றி
ஓம் சேகரனே போற்றி
ஓம் சேவகனே போற்றி

ஓம் சேனாபதியே போற்றி
ஓம் சேவற்கொடியோனே போற்றி
ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
ஓம் சோலையப்பனே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி

ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞானோபதேசியே போற்றி
ஓம் தணிகாசலனே போற்றி
ஓம் தயாபரனே போற்றி
ஓம் தண்டாயுதபாணியே போற்றி
ஓம் தகப்பன் சாமியே போற்றி

ஓம் திருவே போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திருவருளே போற்றி
ஓம் தினைப்பணம் புகுந்தோய் போற்றி
ஓம் துணைவா போற்றி

ஓம் துரந்தரா போற்றி
ஓம் தென்பரங்குன்றனே போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தேவசேனாபதியே போற்றி

ஓம் தேவனே போற்றி
ஓம் தேயனே போற்றி
ஓம் நாதனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிறணந்தவனே போற்றி

ஓம் பிரணவமே போற்றி
ஓம் பரப்பிரம்மமே போற்றி
ஓம் பழனியாண்டவனே போற்றி
ஓம் பாலகுமாரனே போற்றி
ஓம் பன்னிரு கையனே போற்றி

ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் போகர் நாதனே போற்றி
ஓம் போற்றப்படுவோனே போற்றி
ஓம் மறை நாயகனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி

ஓம் மகா சேனனே போற்றி
ஓம் மருத மலையானே போற்றி
ஓம் மால் மருகனே போற்றி
ஓம் மாவித்தையே போற்றி
ஓம் முருகனே போற்றி

ஓம் மூவாப் பொருளே போற்றி
ஓம் யோக சித்தியே போற்றி
ஓம் வயலூரானே போற்றி
ஓம் வள்ளி நாயகனே போற்றி
ஓம் விறலிமலையானே போற்றி

ஓம் வினாயகர் சோதரனே போற்றி
ஓம் வேலவனே போற்றி
ஓம் வேதமுதல்வனே போற்றி
ஓம் கலியுக வரதனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி

முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா…