சீனாவின் வுஹான் பகுதியில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 427 உயிர்களை பலிவாங்கி இருக்கிறது, மேலும்  இந்தியாவில் 3 பேர்  உட்பட  உலகெங்கும் 23 நாடுகளில் 20677 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உலகெங்கும் சீன தயாரிப்புகள் பெருமளவு நிறைந்திருக்கும் நேரத்தில் சீனாவில் முடங்கிப்போன உற்பத்தி சீன பங்கு சந்தையில் நேற்று எதிரொலித்தது. சீன பங்கு சந்தை பெருமளவு சரிந்ததால் சீன பொருளாதாரம் பின்னடைவை கண்டுள்ளது.

அதே நேரத்தில், சீன வர்த்தகத்தை நம்பி இருக்க கூடிய அதன் அண்டை நாடான வியட்நாமில் விவசாய பொருட்கள் தேக்கமடைந்து அழுகும் நிலையில் உள்ளது.

வியட்நாமில் இருந்து சீனாவிற்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படும் உருளை, துரியன், தர்பூசணி உள்ளிட்ட ஏராளமான விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி இருக்கின்றன.

மக்காவு கேளிக்கை விடுதி – நன்றி : NYTimes

இது ஒருபுறமிருக்க, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை விடுதிகள் நிறைந்த மக்காவுவில் பெரும்பாலான கேளிக்கை விடுதிகள் செயல்படாமல் மூடிக்கிடக்கின்றன.

ஏற்கனவே, இந்தியாவின் வைரம் பட்டை தீட்டும் தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.

உலகின் பல்வேறு நாடுகள் சீனாவிற்கான விமான போக்குவரத்தை நிறுத்தியிருப்பதும் கவலையளிப்பதாக உள்ளது.

மேலும் சில நாடுகளில், கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தால் முகக்கவசத்தை வாங்கி சேமித்துவைத்திருப்பது என்பது முகக்கவசம் தேவைப்படும் இடங்களில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

கொரோனா வைரஸ் ஒருபுறம் மனித உயிர்களை பழிவாங்க மற்றொருபுறம் இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவது அதிரிச்சியளிப்பதாக உள்ளது.