சென்னை:

னி நபர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்க தடை விதிக்கும் வகையில்  கட்டுப்பாடுகள் கொண்டுவர முடியுமா?  என சென்னை  உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன் மேத்திய மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

நிலம் கையப்படுத்துதல் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து,

‘நாட்டில் எத்தனை குடும்பங்களுக்கு சொந்த வீடுகள் உள்ளன?

தமிழகத்தில் எத்தனை குடும்பங்களுக்கு சொந்த வீடுகள் உள்ளன? 

மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயன் பெற்றுள்ளனர்?

திட்டம் எப்போது முடிவு பெறும்?

ஆதிதிராவிடர், பழங்குடியினர் வீடு பெற அரசின் சிறப்புத் திட்டம் ஏதேனும் உள்ளதா?’ என சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன்,

‘தனி நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்கக்கூடாது என ஏன் கட்டுப்பாடுகள் கொண்டு வரக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும்,  ‘நாட்டில்  ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் எத்தனை பேரிடம் உள்ளன?

தனி நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்க கட்டுப்பாடுகள் ஏன் விதிக்கக்கூடாது? அல்லது தனி நபர் வாங்கும் 2வது வீட்டின் வரிகளை இரு மடங்காக ஏன் வசூலிக்கக் கூடாது?’

என்றுகேள்விகளை எழுப்பி, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வருகிற மார்ச் 6ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை   ஒத்திவைத்தனர்.