டெல்லி:
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி, நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆசி பெற்ற நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் வந்தடைந்தார்.
2020-21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளு மன்றத்தில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்கிறார். நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில், இன்றைய பட்ஜெட் பொருளாதார வல்லுநர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், 2-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார். முன்னதாக அவர், தனது துறை இணை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆசி பெற்றார்.