டெல்லி:

டெல்லி சட்டமன்ற தேர்தல் களைக்கட்டியுள்ள நிலையில், அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தபோது, விதிகளை மீறி பேசியதாக மத்திய இணை அமைச்சர் மற்றும் பாஜக எம்.பி. நேரில்ஆஜராகி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

டெல்லி தேர்தல் பிரசாரத்தில் மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர்

தலைநகர் டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க ஆம்ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் கட்சிகள் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் டில்லி வட மேற்கு பகுதியான ரித்தாலா என்ற இடத்தில் நடந்த பா.ஜ. தேர்தல் பிரசார கூட்டத் தில் பா.ஜ. வேட்பாளரை ஆதரித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசும்போது, நாட்டிற்கு எதிராக செயல்படும் தேசத்துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும் என ஆவேசமாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இது தொடர்பாக டில்லி தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக வரும் ஜன. 30 (வியாக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அனுராக் தாக்கூர், பா.ஜ. எம்.பி. பர்வேஸ் வர்மா ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.