பாபர்பூர்

பாபர்பூரில் நடந்த அமித் ஷாவின் கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு கோஷமிட்டவர்  சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   ஆனால் பாஜக அமைச்சர்கள் அந்த எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து ஆதரவுக் கூட்டக்கள் நடத்தி வருகின்றனர்.  அவ்வகையில் நேற்று முன் தினம் பாபர்பூர் நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  குடியுரிமை சட்டப் பேரணி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அதே ஊரில் வசித்து வரும் 20 வயது இளைஞர் ஹர்ஜித் சிங் இடையில் புகுந்து திருத்தப்பட்ட  குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அங்கிருந்த பாஜகவினர் ஹர்ஜித் சிங்கை அடித்து உதைத்துள்ளனர்.  வரை இழுத்து கீழே தள்ளி அங்கிருந்த நாற்காலியால் அவரை அடிக்க முயன்றுள்ளனர்.

அருகில் இருந்த காவல்துறையினர் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளன.  அவருக்கு முகம், முதுகு, கால் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.    இந்த நிகழ்வு நடந்த அடுத்த நாள் அதாவது நேற்று அவரை டில்லி காவல் நிலைய காவலர்கள் அவரை அவர் வீட்டில் இருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

டில்லி பல்கலைக்கழகத்தில் பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஹர்ஜித் சிங் மீது தேச விரோத வழக்குப் பதிந்துள்ளதாக ஹர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.  அத்துடன் டில்லி காவல்துறையினர் அவருக்கு மன நிலை சரியில்லை என அவரையே எழுதித் தருமாறு வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.  ஆனால் இதை டில்லி காவல்துறையினர் மறுத்துள்ளனர்.