சுவிட்சர்லாந்து, அணுசக்தி உற்பத்தியில் இருந்து படிப்படியாக வெளியேறும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல்படியாக, சுமார் 47 ஆண்டுகள் அணுஉலை மூலம் மின்சாரம் கொடுத்து வந்த முஹெல்பெர்க் அணு மின் நிலையத்தை முற்றிலுமாக மூடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வருங்கால சந்ததியினர் சுகாதாரமான வாழ்க்கை வாழ, சுவிச்சர்லாந்து நாடு எடுத்துள்ள முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
முஹெல்பெர்க் அணு மின் நிலையம் 373 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வந்தது. இந்த அணுஉலை கடந்த 1972ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 47 ஆண்டு காலம் அந்நாட்டு மக்களுக்கு சேவை செய்து வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு முதல், உற்பத்திக்கான பொருக்ளை குறைத்து சுவிஸ் எரிசக்தி நிறுவனமான பி.கே.டபிள்யூவின் மியூஹெல்பெர்க் நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்த நிலையில், நேற்று அணுஉலை மூற்றிலுமாக மூடும் வகையில், தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், அணு உலையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த இரண்டு பொத்தான்களை அழுத்தி சங்கிலி எதிர்வினை நிறுத்தி உலை செயலிழக்கச் செய்து, ஆலையை முற்றிலுமாக மூடினார். இதை அந்நாட்டு தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்தது.
ஜப்பானின் புகுஷிமாவில் 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட அணு விபத்தைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் ஐந்து அணு உலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அண்டை நாடான ஜெர்மனி 2022 க்குள் அணு மின் நிலையங்களை கைவிட உள்ளது, அதே நேரத்தில் சுவிட்சர்லாந்தின் அரசாங்கம் புதிய அணு உலைகளை உருவாக்கப்போவதில்லை என்றும், அதன் ஆயுட்காலம் முடிவில் அதன் இருக்கும் ஆலைகளை நீக்குவதாகவும் கூறியது.
அதன்படி, அணுசக்தியை விட்டு விலகுவதற்கான முடிவு 2017 வாக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டது, அதற்கு பதிலாக, இது சூரிய, காற்று மற்றும் நீர் மின்சக்தியை மேம்படுத்துவதற்கான மானியங்களுடன் நிலையான எரிசக்தியை முன்னெடுத்துச் செல்லும் அரசாங்க திட்டங்களையும் அறிவித்தது சுவிட்சர்லாந்து அரசு.
இதைத்தொடர்ந்து, தற்போது முதல்கட்டமாக இந்த அணுஉலை மூடப்பட்டு உள்ளது.
அடுத்ததாக 1969 ஆம் ஆண்டிலிருந்து ஜெர்மன் எல்லைக்கு அருகிலுள்ள பெஸ்னாவ் ஆலை அடுத்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், சுவிட்சர்லாந்தின் பிற அணு மின் நிலையங்களை மூடுவதற்கு எந்த தேதியும் நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள , முஹெல்பெர்க்கின் ஆபரேட்டர், மாநில கட்டுப்பாட்டு எரிசக்தி நிறுவனமான பி.கே.டபிள்யூ, அக்டோபர் 2013 இல் ஆலையை மூட முடிவு செய்யப்பட்டதாகவும், இனிமேல் இதுபோன்ற அணுஉலைகளை ஏற்படுத்துவதற்கு சாத்தியமில்லை என்று கூறினார்.
ஏற்கனவே கடந்த 2018 ஆண்டு முதல் இந்த அணுஉலைக்கு தேவைய எரிபொருள் குறைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளர்.
முஹெல்பெர்க்கை அணுஉலை மூடப்பட்டது, மக்களிடையே வெவ்வேறு வகையான உணர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது அவர்களின் சமூக வலைதள பதிவுகள் மூலம் வெளிப்பட்டு வருகிறது.