லிஸ்பன்: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான டேபிள் டென்னிஸ் தகுதிச்சுற்று ‘பிளே ஆப்’ போட்டியில் இந்திய ஆண்கள் & பெண்கள் அணிகள் தோல்வியடைந்தன.

இதனால், ஒலிம்பிக் வாய்ப்பு மொத்தமாக கைநழுவிப் போனது.

போர்ச்சுகல் நாட்டில் நடந்துவரும் இந்த தகுதிச்சுற்று டேபிள் டென்னிஸ் ‘சுற்று 16’ போட்டிகளில் ஏற்கனவே இந்திய அணிகள் தோல்வியடைந்திருந்தன. எனவே, ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கான கடைசி வாய்ப்பாக இந்த ‘பிளே ஆப்’ போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் செக் குடியரசை எதிர்கொண்ட இந்திய ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

பின்னர், இந்திய பெண்கள் அணி, பிரான்ஸை எதிர்கொண்டது. முடிவில் பெண்கள் அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கி‍டைத்த இறுதி வாய்ப்பையும் நழுவ விட்டதால், டேபிள் டென்னிஸ் ஒலிம்பிக் கனவு முற்றிலும் களைந்தது.