உத்தரகாண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உருது மொழியில் எழுதப்பட்ட ரயில் நிலையங்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்படுகிறது.
பிளாட்பார்ம் சைன்போர்டுகளில் ஒரு ரயில் நிலையத்தின் பெயர் இந்தி மற்றும் ஆங்கிலத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட மாநிலத்தின் 2வது மொழியில் எழுதப்பட வேண்டும்.
அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் தீபக் குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
இந்தி, ஆங்கிலம் மற்றும் உருதுக்கு பதிலாக, உத்தரகாண்ட் முழுவதும் பிளாட்பார்ம் சைன்போர்டுகளில் உள்ள ரயில் நிலையங்களின் பெயர்கள் இப்போது இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் எழுதப்படும் என்றார்,
2010ம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தின் 2வது உத்தியோகபூர்வ மொழியாக சமஸ்கிருதம் கொண்டு வரப்பட்டது, இப்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருக்கும் ரமேஷ் போக்ரியால் அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.