மொரதாபாத்: ராமர்கோவில் விவகாரம் வெற்றியை கொடுத்துள்ள நிலையில் குடும்பத்துக்கு 2 குழந்தைகள் என்ற கொள்கையை கொண்டு வர ஆர்எஸ்எஸ் முடிவு செய்திருக்கிறது.
மொராதாபாதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் செய்தியாளர்களை சந்தித்த போது இதை கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது: இதுபற்றி சில காலமாக யோசனை செய்து வருகிறோம்.
ஒரு நாட்டில் ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் இருக்க வேண்டும் என்று கொள்கை இருக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக ஒரு சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும். அதை தான் நாங்கள் விரும்புகிறோம். அதை பற்றி மத்திய அரசு தெளிவான முடிவெடுக்கும்.
ராமர்கோயில் விவகாரத்தில் மத்திய அரசு அறக்கட்டளை நிறுவிய பின்னர் ஆர்எஸ்எஸ் அதில் தலையிடாது. காசி, மதுராவில் கோயில் கட்டுவது எங்கள் கொள்கையில் இல்லை என்றார்.