பெங்களூரு: ‘ஜிஸாட் 30’ எனப்படும் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான செயற்கைக்கோள் ஜனவரி 17ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோவிலிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவிலிருந்து ஏவப்படவுள்ளது. ‘ஏரியன் 5’ என்ற ராகெட்டின் மூலம் ‘இடுல்சாட் கோனக்ட்’ என்ற பிற செயற்கைக்கோள்களுடன் விண்ணிற்கு புறப்படுகிறது ‘ஜிஸாட் 30’.

இந்த செயற்கைக்கோளின் எடை 3357 கிலோ. தொலைத்தொடர்பு, வீட்டிற்கே வரும் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கான டிடிஎச் விஸாட் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பபடுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த செயற்கைக்கோளில் இருவகையான டிரான்ஃபர்கள் உள்ளன. ‘க்யூ பேண்டு’ எனப்படும் டிரான்ஸ்ஃபர் இந்தியா மற்றும் அதனைச் சுற்றிய தீவுகளுக்கும், ‘சி பேண்டு’ எனப்படும் டிரான்ஸ்ஃபர் வளைகுடாப் பிராந்தியம், இதர பல ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் துணைபுரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘ஜிஸாட் 30’ செயற்கைக்கோள் தொழில்நுட்பம் 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.