ஸ்ரீஹரிகோட்டா:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பிய கார்டோசாட்-3 துல்லியமாக எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது.
இஸ்ரோ கடந்த ஆண்டு (2019) நவம்பர் 27ந்தேதி கார்ட்டோசாட்-3 செயற்கை கோளை, ‘பி.எஸ்.எல்.வி. – சி46’ ராக்கெட் உதவியுடன் விண்ணுக்கு செலுத்தியது. இந்த செயற்கைகோள் , இயற்கை புவியியல் அமைப்புகளையும் மனிதனால் உருவாக்கப்பட்ட அம்சங்கள் இரண்டையுமே துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டும் சிறப்பம்சம் என்று அறிவித்திருந்தது. மேலும், நகர மேம்பாட்டுத் திட்டம், வேளாண்மை, நீராதார மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளுக்கான தரவுகளை அனுப்பும் வல்லமை கொண்டது என்றும், ராணுவ ஆய்வுகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும், அது தொடர்பான துல்லிய புகைப்படங்களை அனுப்பும் என்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன்ம தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கார்டோசாட்-3 எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.