சென்னை:
களியக்காவிளை சுங்கச்சாவடி பணியில் இருந்து எஸ்எஸ்ஐ வில்சன், பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி அறிவித்து உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல்அதிகாரி வில்சன், காரில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வில்சன் மீது பாய்ந்த குண்டு பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாகியில் இருப்பது என்றும், வில்சன் மீது 4 வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும் உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழகம் மற்றும் கேரளா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வில்சனை சுட்டுவிட்டு தப்பிச் சென்றவர்கள், பயங்கரவாதிகள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.