சென்னை:
தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெற்றப்பட்டது குறித்து டிவிட் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அந்த வீரர்களை மாணவர்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்துங்கள் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் முக்கிய தலைவர்களுக்கு மத்திய அரசின் இசட்பிரிவு, மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பாதுகாப்பு தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்த பாதுகாப்பு நேற்றுடன் முடிவடைவதாக மத்திய அறிவித்து, பாதுகாப்பு படையினரை வாபஸ் பெற்றுள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல் உள்பட பாதுகாப்பு நடைமுறைகளை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் இத்தகைய முடிவுகளை எடுத்து வருகிறது.
ஓபிஎஸ், ஸ்டாலின் போன்றோருக்கு பெரிய அளவில் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாததால் அவருக்கான இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், தனக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த மத்தியஅரசின் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புக்கு மிக்க நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
பணியாற்றிய சிஆர்பிஎஃப் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நான் முழு மனதுடன் நன்றி கூறுகிறேன்.
வாபஸ் பெறப்பட்ட வீரர்களை, மதத்தின் பெயரில் வன்முறையில் ஈடுபடுவோரிடமிருந்து பல்கலைக்கழகங்களையும் மாணவர்களையும் பாதுகாக்கும் பணிக்கு பயன்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு டிவிட்டில் பதிவிட்டு உள்ளார்.