சென்னை:

மிழக சட்டமன்றத்தில் இன்று கூட்டுறவுச் சங்கங்கள் திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.

இந்த மசோதாவில்,   கையாடல், மோசடி மற்றும் தவறான நடத்தைகளுக்கு கூட்டுறவு சங்க தலைவர், துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கூட்டுறவு சங்க தலைவரோ, அல்லது துணை தலைவரோ குற்றமிழைத்ததற்கான சாட்சியம் இருக்கும்பட்சத்தில், அவர்களை ஆறு மாத காலத்துக்கு தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யலாம் என்றும் அதற்கான காரணத்தை எழுத்து வடிவில் பதிவு செய்யலாம் என்றும் சட்டதிருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா மீது நாளை விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல,  ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் நிதி பயன்பாட்டின் அதிகாரத்தை துணைவேந்தரிடம் இருந்து அரசுக்கு வழங்கும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர்  ஜெயக்குமார்  தாக்கல் செய்தார்.

அதில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் நிதி பயன்பாட்டை கண்காணிப்பதற் காக, ஆய்வு மற்றும் விசாரணை செய்யும் அதிகாரத்தை வேந்தரிடம் இருந்து அரசுக்கு வழங்கும் வகையிலும் மீன்வள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்யும் வல்லுநர் குழுவில் அரசு பிரதிநிதி ஒருவரை சேர்க்கவும்  வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேரும்,  வேளாண் விளைபொருள் சந்தைப் படுத்துதல் பற்றிய புதிய சட்டத் திருத்த மசோதாவை  தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு  தாக்கல் செய்தார். அதில்,   தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தைப் படுத்துதல் மூன்றாம் திருத்த அவசர சட்டமாக  பிறப்பிக்கப்பட்டது.