சென்னை:

மிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில், பல இடங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்றுள்ள நிலையில், கணவன் மனைவி ஆகிய இருவரும் போட்டியிட்டு தம்பதி சமேதராக  வெற்றி பெற்றுள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆளும் கட்சியான அதிமுகவை விட திமுக அதிக இடங்களை கைப்பற்றி உள்ள நிலையில், பல இடங்களில் சில வாக்குகள் வித்தியாசத்திலேயே திமுக, அதிமுக இடையே வெற்றி தோல்வி உறுதியானது.

இந்த நிலையில் பல இடங்களில் கணவன் மனைவி ஆகிய இருவம் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் இருவருமே வெற்றிபெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  உடன்குடி யூனியன் லட்சுமிபுரம் பஞ்சாயத்து தலைவராக போட்டியிட்ட ஆதிலிங்கம் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அதுபோல அவருடிடய தங்கலட்சுமி, உடன்குடி யூனியன் 7-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் அவருக்கும் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக தம்பதிகள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 6-வது வார்டில் முத்துலட்சுமி என்பவர் போட்டியிட்டார். 7-வது வார்டில் இவருடைய கணவரும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான விவேகன் ராஜ் போட்டியிட்டார். கணவன்-மனைவியான இவர்கள் 2 பேரும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி யூனியனில் உள்ள பள்ளபட்டி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு முருகேசன் என்பவர் போட்டியிட்டார். அவரது மனைவி வள்ளிமயில், யூனியன் 2-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தம்பதிகள் வெற்றிபெற்று அந்த பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய 4-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.ஸ்ரீதர் வெற்றி பெற்றார். அவரது மனைவி எஸ்.கீதா மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு  வெற்றி பெற்றார். இருவரும் வெற்றி பெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஜெயக்குமார் 10-வது வார்டில் களம் இறங்கினார். மேலும், ஜெயக்குமார்  அவருடைய மனைவி சண்முகப்பிரியா 12-வது வார்டில் போட்டியிட்டார். இருவரும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இவர்கள் போல ஏராளமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தல் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.