கொல்கத்தா: தனக்கு யார்க்கர் வீச கற்றுத் தந்தது இலங்கை வீரர் மலிங்கா அல்ல என்றும், தொலைக்காட்சியே தனக்கு பெரியளவில் உதவியதாகவும் கூறியுள்ளார் இந்திய வேகப்பந்து நட்சத்திரம் பும்ரா!

அவர் கூறியுள்ளதாவது, “மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தபோது, மலிங்காதான் எனக்கு யார்க்கர் வீச கற்றுக்கொடுத்தார் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், அது தவறு.

அவர் களத்தில் எதையும் நேரடியாக கற்றுக்கொடுத்ததில்லை. ஆனால், ஆவசமடையாமல் பந்து வீசுதல், சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளுதல் உள்ளிட்ட சில விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

தொலைக்காட்சிதான் எனக்கான பெரிய உதவியாக இருந்தது. அதன்மூலமே பலவற்றையும் கற்றேன். என்மீதான விமர்சனங்களை வீடியோவில் பார்த்து சரிசெய்து கொள்வேன். கிரிக்கெட் களத்தில் தனியாக இருப்பதால், நம்மை நாமேதான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்திய வேகப்பந்து வீச்சுத் துறையின் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார் பும்ரா. இவர் யார்க்கர் வீசுவதிலும் எகனாமிக்காக வீசுவதிலும் பெயர் பெற்றவர்!