சென்னை:

புத்தாண்டு தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம் தர வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால்புரோகித் தமிழில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி கூறியிருப்பதாவது,

இந்த 2020 புத்தாண்டு நன்னாளில், எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மகிழ்ச்சியான நன்னாளில், ஒளிமயமான, வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இன்றியமையாத தான நல்லிணக்கம் மற்றும் நட்புணர்வுகளை நாம் அனைவரும் வளர்ந்தோங்கச் செய்து வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை பெறுவதற்கு ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானிப்போம்.

புத்தாண்டு விடியல் தமிழக மக்களுக்கு ஏராளமான மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும் என்று இந்த புத்தாண்டு நன்னாளில் தமிழக மக்களை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழில் வாழ்த்து செய்தியை கவர்னர் பன்வாரிலால் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.