டெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் உருவானது.
லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளது. அந்த இல்லத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரதமரின் இல்லத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் 9 தீயணைப்பு வாகனங்கள் களத்தில் இறங்கி இருக்கின்றன. சிறிய அளவிலான தீ விபத்து என அங்கிருந்து வரும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.