ராய்ப்பூர்:
சத்திஸ்கர் மாநில பழங்குடியினன மக்களுடன் ராகுல் காந்தி சேர்ந்து ஆடிய அசத்தல் நடனம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தேசிய பழங்குடியின நடன விழா சத்தீஸ்கரில் இன்று தொடங்கியது. இந்த விழாவை தொடங்கி வைத்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, விழாவில் கலந்துகொண்ட பழங்குடியினாருடன் இணைந்து நடனம் ஆடினார்.
இந்த நடன நிகழ்ச்சியின்போது, ராகுல்காந்தி, சிவப்பு நிறத் தலைப்பாகை அணிந்தும், தலையில் கொம்பு வைத்தும் உற்சாகமுடன் நடனம் ஆடினார். அவருடன் சத்திஸ்கர் முதல்வர் பூபேஸ் பாகேல் மற்றும் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நடனம் ஆடினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூரில் நான் இன்று தேசிய நடன விழாவைத் துவங்கி வைக்கிறேன். இந்த தனித்துவமான விழாவானது மிகவும் முக்கியமானது, மற்றூம் பழங்குடியினரின் கலாச்சாரத்தைப் பாதுக்காப்பதற்க்கான தொடக்கம் என தெரிவித்துள்ளார்