கிரகண நேரத்திலும் நடை திறந்திருக்கும் ஒரே கோயில்
சேலம் அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் …!
சேலம் கோட்டை மாரியம்மனைப் பற்றிய ஈசன் டி எழில் விழியனின் முகநூல் பதிவு
பொதுவாக சூரிய ,சந்திர கிரகணங்களின் போது அனைத்து கோயில்களின் நடை சாத்தப்பட்டு ,கிரகணம் முடிந்த பின் ,சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு நடை திறப்பது மரபு …!
ஆனால் சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் எந்த காலத்திலும் கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்படுவதில்லை ..! இன்றைய சூரிய கிரகண நேரத்திலும்
( காலை 8.09 முதல் பகல் 11.19 வரை) கோயில் நடை பக்தர்களின் தரிசனத்திற்குத் திறந்து தான் இருக்கும்..!
“நவக்கிரக நாயகி”யான கோட்டை பெரிய மாரியம்மன் ,தான் படைத்த நவக்கிரகங்களின் வானியல் பாதையில் ஏற்படும் ஒரு நிகழ்வுக்காக ,தன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதை நிறுத்துவதில்லை என்றும் மேலும் கிரகண காலத்தில் அம்மனை வழிப்படுவது தனிச்சிறப்பு என்றும் கோயில் பூசாரிகள் இதற்கு விளக்கமாகத் தெரிவிக்கின்றனர் …!
இன்று ,வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள் பாலிக்கும் சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் ..!