டெல்லி:
உங்களோட சர்வதேச சாதனைகள் அதிகமாக வெளியில தெரியாமலே போயிட்டே என்று, அஸ்வின் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி வருத்தம் தெரிவித்து உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான அஸ்வின் ரவிச்சந்திரன் எட்டியுள்ளார். இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில்,. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அஸ்வினுக்கு பாராட்டு தெரிவித்து இன்ஸ்டாகிராம் பதிவிட்டு உள்ளார். அதில்,. அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சவுரவ் கங்குலி, அஸ்வின் தன்னுடைய மேலான திறமையை வெளிப்படுத்தி வருவதாகவும் ஆனால் அதிக நேரங்களில் அவருடைய திறமை வெளியில் தெரியாமலேயே போவதாகவும் தெரிவித்துள்ளார்
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பௌலர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச அளவில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சர்வதேச டெஸ்ட் அணியிலும் விராட் கோலியை அடுத்து அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த வீரரான அஸ்வின், கடந்த 2011ல் தன்னுடைய முதல் தன்னுடைய சுழற்பந்துகள் மூலம் உலக நாடுகளின் கிரிக்கெட் வீரர்களுக்கு கிலி ஏற்படுத்தி வருகிறார். சர்வதேச அணியில் இடம்பிடித்த அஸ்வின் இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில்தான் அஸ்வினின் “சாதனை வெளியில் தெரிவதில்லை” என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
முதலிடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் அஸ்வினை விட 29 விக்கெட்டுகள் குறைவாக பெற்று இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆன்டர்சன் இரண்டாவது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.