சென்னை:
பெரியார் 46 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அணுசரிக்கப்படும் நிலையில், திமுக தலைவர், பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொருளாளர் துரை முருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அதேபோல் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் பெரியாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது டிவிட்டர் பதில், ஈரோட்டுப் பூகம்பம் என முத்தமிழறிஞரால் போற்றிய அறிவாசான் தனது அறிவுப்பயணத்தை நிறுத்தி அரைநூற்றாண்டு ஆனது. ஆனாலும் அது வெடித்துக்கொண்டே தான் இருக்கிறது. தமிழினம் உணர்வு பெற அந்த வெப்பம் மேலும் பல நூற்றாண்டுகளுக்குத் தேவை! அவரது பாடங்கள் கைகாட்ட நமது பயணம் தொடரும்! வாழ்க பெரியார்…
இவ்வாறு கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]