டில்லி

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ளன.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு 5 கட்டங்களாக நடைபெற்றது.   நேற்று இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.   பதிவான வாக்குகள் வரும் 23 ஆம் தேதி அன்று எண்ணப்பட உள்ளன.   இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா,  காங்கிரஸ், மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள்  கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.

இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக அறிவித்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பெரிதும் பேசப்பட்டது. அத்துடன் காக்கிர்ஸ் கூட்டணி பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவை குறித்தும் பிரசாரம் செய்தன.  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் இந்த பிரசாரத்தின் தாக்கம் தேர்தலில் எதிரொலித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்த தொகுதிகளான 81 தொகுதிகளிலும் வாக்கெடுப்பு முடிந்துள்ளன.

இந்தியா டுடே ஊடகம் நடத்திய கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி38 முதல் 50 இடங்களில் வெற்றி பெறும் எனவும் பாஜகவுக்கு 22-32 இடங்களில் வெற்றி கிடைக்கும் எனவும் காணப்படுகிறது.

கைலாஷ் நியூஸ் கணிப்பில் காங்கிரஸுக்கு 37-49 இடங்களிலும் பாஜகவுக்கு 2-30 இடக்க்ளிலும் வெற்றி கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏபிபி கணக்கெடுப்பில் காங்கிரஸ் கூட்டணிக்கு 35 இடங்கள் வரையும் 32 இடங்கள் வரை பாஜகவுக்கும் வெற்ற் கிடைக்கலாம் எனச் சொல்லப்பட்டுள்ளது.