புதுடெல்லி: பிரமோஸ் ஏவுகணைகளுக்காக பிலிப்பைன்ஸ் நாடு, இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை நடுத்தர தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையாகும். இது 200 முதல் 300 கிலோ எடையுடன் பறக்கும் திறன் வாய்ந்தது. இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் ரஷ்ய நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கியதுதான் இந்த பிரமோஸ் ஏவுகணை.

உலகளவில் குறிப்பிடத்தக்க ஏவுகணைகளில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது இந்த பிரமோஸ் ஏவுகணை. இந்தியாவின் முப்படைகளிலும் இந்த ஏவுகணைப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஏவுகணையை நீர், நிலம் மற்றும் விமானங்களிலிருந்தும் ஏவலாம். எனவே, இந்த ஏவுகணையை தனது ராணுவத்திற்கு வாங்குவதற்காக ஆர்வம் காட்டு பிலிப்பைன்ஸ் நாடு, அதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்தாண்டு வாக்கில் அந்நாட்டிற்கு பிரமோஸ் ஏவுகணைகள் வழங்கப்படுமாம். அந்நாட்டு பட்ஜெட்டிலும் 300 பில்லியன் டாலர் அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாம்.