பல்வேறு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் சுமார் 400 இந்திய மாணவர்கள் கடந்த 15ம் தேதி, ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட “மிருகத்தனமான போலிஸ் வன்முறையை“ கண்டித்துள்ளனர்.

போலிஸ் மிருகத்தனத்தைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் அல்லது பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறும் அவர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கேட்டுள்ளனர்.

17 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் கையொப்பமிட்டவர்களின் பெயர்களைக் கொண்ட ஒரு விரிவான அறிக்கையில், அவர்கள் “அரசியலமைப்பற்ற மற்றும் பாரபட்சமான” குடியுரிமைத் திருத்தச் சட்டம் (அண்மையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக) எதிர்ப்பு தெரிவித்த இந்திய பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களுக்கு ஆதரவாக ஒருமித்துக் குரலெழுப்பினர்.

“எந்த வகையில் பார்த்தாலும், ஜாமியாவிலும் AMU விலும் காவல்துறையும் துணை ராணுவமும் வன்முறையைப் பயன்படுத்தியுள்ளன. அது இந்திய அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் பாதுகாப்புகளை மீறும் வகையில் போராட்ட மாணாக்கர்களுக்கு எதிராக சட்டவிரோத மற்றும் பொறுப்பற்ற தந்திரங்களை பின்பற்றியுள்ளன” என்று ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் ஜலக் எம். கக்கர் மூலம் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை கூறுகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் போலிஸ் மற்றும் துணை ராணுவத்தினரின் நுழைவு, வளாகங்களுக்குள் கண்மூடித்தனமான தாக்குதல்கள், நூலகங்களில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசுதல் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக மிருகத்தனமாக சக்தியைப் பிரயோகிப்பது“ ஆகியவை சட்டத்தின் அப்பட்டமான மீறல் மட்டுமின்றி எந்தவொரு ஜனநாயக சமூகத்தின் மனசாட்சியையும் அதிர்ச்சியடையச் செய்யும்” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

போலிஸ், கல்லூரி விடுதிகளை சூறையாடி, பெண்களை பலவந்தப்படுத்துதல், காவல் நிலையங்களில் ஜாமியா மாணவர்களை தன்னிச்சையாக காவலில் வைத்தல், சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்தை அணுக மறுப்பது போன்ற மாணவர்களின் விவரிப்புகளைக் குறிப்பிடுகையில், “சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு ஜனநாயக சமூகத்தில், காவல்துறை தனது செயல்பாட்டை வழிநடத்தும் ஒவ்வொரு விதிமுறையையும் முழுமையாக புறக்கணித்திருப்பதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

“இந்த மிருகத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்ற உண்மையின் வெளிச்சத்தில் மேலும் காணப்பட்ட இந்த சம்பவங்கள் ஒரு சிறுபான்மை குழுவுக்கு எதிரான குறிவைத்த வன்முறையின் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளாக விளங்குகின்றன” என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

அசாமில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கண்டனம் செய்தனர், அங்கு “காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு மைனர் சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் இறந்துவிட்டனர்”.

“இது, மாநிலத்தில் சட்டவிரோதமாக இணையம் முற்றுகையிடப்பட்டதோடு, அங்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கும், எதிர்ப்பாளர்கள் தங்கள் கோரிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் காவல்துறையின் சட்டவிரோத செயல்பாடுகளை அறிவிப்பதற்கும் முற்றிலும் தடையாக உள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்களை “கலவரம்” என்று இந்திய தலைமை நீதிபதி கூறியதுடன், இது காவல்துறையினர் கையாள வேண்டிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகக் கருதுவது குறித்தும் எதிர்ப்பாளர்களின் உரிமைகளை காவல்துறை மீறுவதை, குறிப்பாக அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் அளவினையும் உணராதது குறித்தும் கவலை தெரிவித்திருந்தது.

காவல்துறையினரின் “வன்முறைக்கு” உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவும், வளாகங்களிலிருந்து முழுமையாக விலகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்த தில்லி காவல்துறை, உத்தரபிரதேச காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியோர் மீதான உடனடி சுயாதீன விசாரணை இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

இது மேலும், போலிஸ் அல்லது பிற சட்ட அமலாக்கர்களால் கட்டாயப்படுத்தப்படாமல் போராட்ட மாணாக்கர்களை இந்திய அரசியலமைப்பின் கீழ் தங்கள் அடிப்படை உரிமைகளை சமாதானமாக தொடர அனுமதி கோரியது.

அரசியல் கோரிக்கைகளை எதிர்ப்பதன் மூலம் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான கடமைகளை நிறைவேற்ற ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அவர்களின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தல், மற்றும் அரசியலமைப்பு, சட்ட மற்றும் நெறிமுறை வரம்புகளுக்குள் காவல்துறை கண்டிப்பாக செயல்படுவதை உறுதிசெய்யமாறும் கோரியது.

அறிக்கையில் கையெழுத்திட்ட மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களின்  குழுக்கள் சார்ந்துள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களாவன: ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், பிரவுன் பல்கலைக்கழகம், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், கார்னெல் பல்கலைக்கழகம், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி பர்டூ பல்கலைக்கழகம், கார்னகி மெலன் பல்கலைக்கழகம், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம்.

ஒற்றுமை நகர்வுகளின் ஒரு அங்கமாக, CAA மற்றும் NRC க்கு எதிராக டிசம்பர் 17 அன்று ஹார்வர்டில் பல எதிர்ப்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

[youtube-feed feed=1]