தனது எஜமானரின் குதிரை ஷெட் தீப்பிடித்து எரிவதை அறிந்த நாய், தனது எஜமானரை அழைத்துக்கொண்டு ஓடி வரும் காட்சி வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான அலாஸ்கா கனடாவிற்கு அருகே உள்ளது. மிகவும் குளிரான பகுதி. பனிக்கட்டி கள் உறைந்த சாலைகள் காணப்படும். இந்த பகுதியில் உள்ள குதிரைப்பட வீரர் ஒருவரின் ஷெட் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த பகுதியில் உள்ள ஜிபிஎஸ் கருவிகளும், பனி காரணமாக உறைந்து போன நிலையில், இதுகுறித்து தகவல் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், அங்கிருந்த நாய், புத்திசாலித்தனமாக செயல்பட்டு, ஓடிச்சென்று தனது எஜமானரை அழைந்து வந்தது.
பனி படர்ந்த சாலையில், அவர் பின்தொடர நாய் வேகமாக ஓடி வரும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாயை பின்தொடர்ந்து வந்தவர், இந்த காட்சியை படம் பிடித்து இணையதளத்தில் பதிவேற்றி உள்ளார்.
நாயின் புத்திசாலித்தனமான நடவடிக்கை காரணத்தால், அந்த ஷெட் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.