டில்லி

பி யை ஆளும் பாஜக அரசு பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க என்ன செய்ய உள்ளது எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கேட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உன்னாவ் பகுதியில் ஐந்து பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்தார்.   அதையொட்டி வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்ட ஐவரில் இருவர் ஜாமீனில் வந்துள்ளனர்.   ஜாமீனில் வந்தவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்தப் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.   நேற்று இரவு அந்தப் பெண் மரணம் அடைந்தார்.

மருத்துவமனையில் அந்தப் பெண் தன்னை காப்பாற்ற வேண்டும் எனக் கதறி அழுத செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.   இது அனைவர் மந்தையும் உருக வைத்தது.  உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசின் மெத்தனத்தால் பெண் மரணம் அடைந்ததாகப் பல எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில், ” பலியானவரின் முழு குடும்பமும் ஒரு வருடமாகச் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றவாளிகளுக்கு பாஜக தொடர்பு இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதனால்தான் அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் குற்றவாளிகள் சட்டத்திற்குப் பயப்படுவதில்லை.

உத்தரப்பிரதேச மாநிலம்  உன்னாவில் ஏற்கெனவே நடந்த சம்பவங்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் ஏன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை.?   இந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்த காவல்துறை அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

பாஜக ஆட்சி செய்யும்  உத்தரப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க அரசு என்ன செய்யப் போகிறது?

எரிக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தார் இத்துயரத்திலிருந்து மீள இறைவன் அவர்களுக்கு ஆசி புரியட்டும் என வேண்டுகிறேன்.   நாம் அனைவரும் அப்பெண்ணுக்கு நீதி வழங்க முடியாமல் போனதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.  இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிலவும் சட்டத்தின் ஓட்டைகளையே காட்டுகிறது” எனப் பதிவு இட்டுள்ளார்.