டில்லி
தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மரண தண்டனை அடைவதைப் பார்க்க வேண்டும் எனக் கதறிய உன்னால் பெண் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
சென்ற வருடம் உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஐந்து பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரி அடிப்படையில் பலாத்காரம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் இருவர் ஜாமீனில் வெளி வந்துள்ளனர்.
நேற்று முன் தினம் அந்தப் பெண் இந்த வழக்கு விசாரணைக்காக ரேபரேலி நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார். அப்போது ஜாமீனில் வந்த இருவர் மற்றும் அவர்கள் கூட்டாளிகள் தாக்கி அருகில் உள்ள காலி நிலத்தில் வைத்துப் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி விட்டுத் தப்பி ஓடி விட்டனர்..
எரிக்கப்பட்ட அந்தப் பெண் 90% தீக்காயங்களுடன் லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அந்தப் பெண் பிறகு டில்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அந்த பெண், தனது சகோதரரிடம், “அண்ணா என்னைக் காப்பாற்றுங்கள். நான் சாக விரும்பவில்லை. என்னைப் பலாத்காரம் செய்தவர்கள் மரண தண்டனை பெறுவதை நான் பார்க்க விரும்புகிறேன். என்னைக் காப்பாற்றுங்கள் அண்ணா”எனக் கதறியுள்ளார்.
நேற்று இரவு அந்தப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்
அவரை எரித்துக் கொன்ற ஐந்து பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.