டில்லி

னி நாடாளுமன்ற உணவு விடுதியில் மலிவு விலை உணவுகள் வழங்கப்படுவது நிறுத்த உள்ளதற்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவு விடுதியில் மலிவு விலையில் உணவு அளிக்கப்பட்டு .வந்தது.   நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் இல்லாத அளவுக்கு இந்த உணவு விடுதியில் விலை குறைவாக இருந்து வந்தது.  இந்த மலிவு விலை குறித்து கடும் சர்ச்சை வெடித்தது.   அதையொட்டி சென்ற ஆண்டு இறுதியில் உணவுகளின் விலை சற்றே அதிகரித்தது.

இந்த உணவு விடுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அன்றி ஊழியர்கள், பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் உணவருந்தி வ்ருகின்றன்ர். நாள் ஒன்றுக்கு இந்த விடுதியில் சுமார் 4500 பேர் வரை உணவருந்துவதாகக் கணக்குகள் தெரிவிக்கின்றன.    எனவே இந்த விடுதியில் மற்ற இடங்களைப் போல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

அவருடைய இந்த யோசனைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.   அதையொட்டி இனி நாடாளுமன்ற உணவு விடுதியில் மலிவு விலை உணவு வழங்குவதை நிறுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.   இனி வெளியில் விற்கப்படும் அதே விலையில் உணவு விற்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டொன்றுக்கு ரூ.17 கோடி மிச்சமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]