வாஷிங்டன்

ஆண்களுக்கு வரும் பிராஸ்டேட் புற்று நோயை அல்டிரா சவுண்ட் மூலம் முழுமையாகக் குணப்படுத்தலாம் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிராஸ்டேட் சுரப்பி என்பது ஆண்களுக்கு மட்டும் உள்ள குழந்தை பிறப்பு மற்றும் ஆண்மை தன்மை உடன் தொடர்புள்ள ஒரு உறுப்பாகும்.   இந்த சுரப்பி சிறுநீர்ப்பைக்குச் சற்று கீழே அதாவது குதத்துக்கு முன்பு உள்ளது   இது சிறுநீர்க்குழாயின் ஆரம்ப நிலையில் உள்ளது.   இந்த சுரப்பியில் உருவாகும் திரவத்தின் மூலம் ஆணிடம் இருந்து உற்பத்தி ஆகும் உயிரணுக்கள் உடலுறவின் போது பெண்ணுக்குள் செல்கிறது.

ஆண்களுக்கு இந்த சுரப்பியில் புற்று நோய் வருவது அதிகமாக உள்ளது   இதைப் புராஸ்டேட் புற்று நோய் எனக் கூறுவது வழக்கமாகும்.   இதனால் பலர் மரணம் அடைந்துள்ளனர்.   இதற்கான அறுவை சிகிச்சை மிகவும் கடினமானதாகும்.   இந்த அறுவை சிகிச்சையாள் ஆண்கள் சிறுநீரை அடக்க முடியாத  அல்லது ஆண்மையற்ற நிலையை அடைகின்றனர்.

இதையொட்டி அமெரிக்காவில் ஒரு புதிய சிகிச்சை முறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.    புராஸ்டேட் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 115 ஆண்களுக்கு இந்த அல்டிரா சவுண்ட் முறை சிகிச்சை நடத்தப்பட்டது.  இந்த முறைப்படி ஒர் கம்பி போன்ற சாதனம் சிறுநீர்க்குழாயினுள் செலுத்தப்பட்டு அதன் மூலம் அல்டிரா சவுண்ட் அதிர்வுகள் அனுப்பப்படுகிறது.

இந்த அல்டிரா சவுண்ட் அதிர்வினால் புராஸ்டேட் புற்று நோயின் செல்கள் உடைந்து அழிந்து விடுகின்றன   இவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 80% பேருக்கு முழுமையாகப் புற்று நோய் அழிந்துள்ளது.  அதில் 65% பேருக்குப் புற்று நோய் இருந்ததற்கான அறிகுறிகளும் காணப்படவில்லை.   சிகிச்சை பெற்ற அனைவரும் முழு ஆண் மகனாக வாழ்க்கை நடத்தி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.