சென்னை:

மிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 3 மாவட்டங் களில் பள்ளி, கல்லூரிகளுக்கும்  விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னையிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல சென்னை பல்கலைக்கழகத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் தமிழகம் முழுவதும் மீண்டும் நல்லமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாள்களுக்கு மிதமானது முதல் கனத்த  மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம்  எச்சரித்து உள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் நேற்றுமுதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கி உள்ளது.

கனமழை தொடர்ந்து கொட்டி வருவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, கடலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம்,  மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடுப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர் மழை காரணமாக, புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்து உள்ளார். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.