கோவை:

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் தலைகீழாக செல்லும் நிலையில், பல்வேறு நிறுவனங்கள் மூட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, லட்சக்கணக்கானோர் வேலையிழந்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், கோவையில் துப்புறவு பணியார்கள் வேலைக்கு நடைபெற்ற நேர்காணலில் ஏராளமான பொறியியல் பட்டதாரிகள் குவிந்த சம்பவம், அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியது. மோடி அரசின் திறமையின்மையை இது பறைசாற்றி உள்ளது.

கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது. அதனப்டி, 549 நிரந்தர துப்புரவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கு  7 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் அதிகமானோர் பொறியியல் படித்த பட்டதாரிகள் என்பதை, விண்ணப்பங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, அங்கு வந்தவர்களில் கல்வி தகுதி அடிப்படையில் தனி தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு  நேர்காணல் நடைபெற்றது.

இந்த வேலைக்கு 25 வயது உள்ளவர்கள் முதல் 40 உள்ளவர்கள் அதிகமாக வந்திருந்ததாகவும், 70 சதவிகிதம் பேர் எஸ்எஸ்எல்சி படித்துள்ளவர்கள், என்றும் மற்றவர்கள் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகளும் வந்திருந்தனர்.

சாதாரண துப்புரவு பணியாளர் வேலைக்கு பட்டதாரி, பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் குவிந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக பொருளாதார நிபுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தால், நாடு கடுமையான சரிவுகளை சந்தித்து வரும் நிலையில், நாடு முழுவதும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் தகுந்த வேலையின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த அவல நிலையில், தற்போது துப்புறவு பணிக்கும்  பொறியியல் பட்டதாரிகள்  வந்திருப்பது, மோடி ஆட்சியின் அவலத்தை உலகுக்கு பறைசாற்றி உள்ளது. 
: