தேனி:
தேனியில் இன்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி துணைமுதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், பங்குபெற்ற 1,360 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துணைமுதல்வர் ஓபிஎஸ், அங்கிருந்த கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வளைகாப்பு நடத்தி வைத்து வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Patrikai.com official YouTube Channel