சென்னை:

மிழகத்தின் 34 ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்று உதயமாகிறது. கடந்த வாரம் 33வது மாவட்டமாக தென்காசி உதயமான நிலையில், இன்று 34வது மாவட்டம் உதயமாகிறது. தமிழக முதல்வர்  கள்ளக்குறிச்சி சென்று புதிய மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார்.!

தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், மேலும் சில மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்று 3 மாவட்டங்களாகவும், நெல்லை மாவட்டம் நெல்லை, தென்காசி என்று 2 மாவட்டங்களாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என்று 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டது. அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

அதைத்தொடர்ந்து, கடந்த 11 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தை எடப்பாடி பழனிசாமி த் திறந்து வைத்தார். இது 33வது மாவட்டமாக உதயமானது. இந்த நிலையில், தமிழகத்தின் 34வது மாவட்டமாக  கள்ளக்குறிச்சி மாவட்டத்தை, கள்ளக்குறிச்சியில் உள்ள சாமியார் மடம் மைதானத்தில் காலை 11 மணியளவில் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி துணைமுதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் , தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள்,  அதிமுக தொண்டர்கள், மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.