மும்பை:

காராஷ்டிர அரசியல்  நிலவி வரும் குழப்பத்திற்கிடையே, அஜித் பவாரை,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சாகன் பூஜ்பால் இன்று மீண்டும் சந்தித்து பேசி வருகிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக அஜித்பவார் கொடுத்த ஆதரவைத் தொடர்ந்து பாஜக அரசு 23ந்தேதி அன்று பதவி ஏற்றது. முதல்வராக பட்னாவிசும், துணைமுதல்வராக அஜித்பவாரும் பதவி ஏற்றனர்.

இதையடுத்து, மகாராஷ்டிராவில் பரபரப்பு ஏற்பட்டது. அஜித்பவாரின் முடிவு, அவரது தனிப்பட்டது என்று சரத்பவார் போர்க்கொடி தூக்க பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சரத்பவார், உத்தவ் தாக்கரே சந்திப்பு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்கள், அஜித்பவாரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும், பாஜகவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த கவர்னர் மீது உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பபோவதாகவும் அறிவித்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், அஜித்பவாருக்கு ஆதரவு தெரிவித்த சில எம்எல்ஏக்களும், மீண்டும் சரத்பவாரிடமே தஞ்சம் அடைந்துள்ள நிலையில்,  துணை முதல்வர் அஜித் பவாரை சந்தித்து ஆலோசித்து வருகிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாகன் பூஜ்பால் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அவரை சமாதானப்படுத்தும் முயற்சி நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், சாகன் பூஜ்பால் – அஜித் பவார் இடையே மீண்டும் சந்திப்பு  நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஏதேனம் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.